நாட்டு மக்களின் நிலைமையினை உணர்ந்து கொள்ளாது ராஜபக்சர்களை பாதுகாப்பதுடன் தனது அதிகாரத்தினை தொஅடர்ந்து நிலைநாட்டி கொள்வதற்காகவே ரணில் விக்கிரம சிங்க செயற்பட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
IMF கடனுதவி கிடைக்க பெற்றுள்ளதால் ரணில், ராஜபக்சர்களை வாழ்த்தி பாடுபவர்கள் பட்டாசுகளை கொளுத்தி கொண்டாடியுள்ளனர். இது ஒரு கேளிக்கைக்குரிய செயற்பாடு ஏனெனில், கடன் வாங்கியதற்காக பட்டாசு கொளுத்தி கொண்டாடிய நாடக இலங்கை மட்டுமே திகழ்கின்றது.
ரணில் விக்கிரமசிங்க இதற்கு முன்னரும் IMFஇடம் 5 தடவைகள் தஞ்சமடைந்துள்ளார். முழுவதுமாக IMF பிடமிருந்து 16 தடவைகள் கடன் வாங்கப்பட்ட நிலையில், 53 மில்லியன் கடனாளியாக நாடு மாறியுள்ளது.
மீண்டும் குறித்த கடனை ராஜபக்சர்களின் பாட்டன்மார்களோ அல்லது ரணிலின் மாமனாரோ செலுத்தப்போவதன்று இதற்காக நாட்டு மக்களின் உழைப்பும், உதிரமும் உறிஞ்சி எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
IMF கடனை வழங்குவதற்காக சில நிபந்தனைகைளை முன்வைக்கும். அதில் அடிமட்ட நிலையிலுள்ள மக்களின் உழைப்பினை பிழிந்தெடுப்பது மற்றும் நடுத்தர வர்க்க குடும்பத்தினை கீழ் நிலைக்கு தள்ளுவது போன்றவற்றுக்கான நிபந்தனைகளை பிரதானமாக முன்வைப்பு செய்யும்.
அத்தோடு 13 மில்லியனாக இருக்கும் நாட்டின் வருமானத்தை 16 மில்லியன் ஆக உயர்த்துமாறு IMF நிபந்தனையிட்டுள்ளது. அதற்காக அரசாங்கம் மேலும் மேலும் விரியினை மட்டுமே அதிகரிக்கும்.
நாட்டில் உற்பத்திகள் அதிகரிக்கப்பட்டு டொலர் பெருகி அதன் மூலம் ரூபாயின் மதிப்பு கூடியிருந்தால் அது வரவேற்கத்தக்கதே.
ஆனால் மாறாக இறக்குமதிகள் மற்றும் மக்களின் நுகர்வுகள் குறைந்தமை அத்துடன் கடந்த காலத்தில் 400 மில்லியன் ரூபாய் கடன் கிடைக்க பெற்றதுடன் இன்று 33 மில்லியன் ரூபாய் கடனாக கிடைத்தமை போன்றவற்றினாலே டொலர் மதிப்பு பெற்றுள்ளது.
கிறிஸ் நாடு IMF பிடமிருந்து கடன் வாங்குவதற்கு அந்நாட்டின் நிதியமைச்சருடன் மக்களும் இணைந்து எதிர்த்தனர். அவற்றை மீறி அந்த நாட்டின் பிரதமர் IMF பின் நிபந்தனைகளிற்கு கட்டுப்பட்டு கடன் வாங்கினார்.
இதனால் கிறிஸ் மேலும் மேலும் வீழ்ச்சியடைந்தமையால் IMF அவ் நாட்டின் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. ஐரோப்பாவிலிருக்கும் முக்கிய நாட்டிற்கே இந்த நிலை என்றால் எமது நிலை மோசமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
சகல வளங்களும் நிறைந்த நாட்டினை தூரநோக்கின்றி 75 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களே வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளனர்.
மக்களுக்கான லாபத்தினை ஈட்டுகின்ற அரச நிறுவனங்களை தனியார் நிறுவனக்களிடம் தாரைவார்கின்ற நபராக ரணில் மாறியுள்ளார். அத்துடன் ராஜபக்சர்களை பாதுகாத்து தனது அதிகாரத்தினை தக்கவைத்து கொள்வதில் முனைப்புடன் செயற்படுகின்றார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களை பற்றியும் , மக்களது உணர்வுகள் பற்றியும் உணர்ந்து கொள்ளாது இரும்புத்தனமாகவும், அரக்க குணம் படைத்த நபராகவும் மாறி நாட்டை சீரழிக்கும் செயற்பாடுகளை ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகின்றார் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.