தமிழ் மக்கள் தற்பொழுதும் நின்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய சூழல் இல்லை எனவும் இந்த விடயத்தில் நாணய நிதியம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய சிவஞானம் சிறீதரன்,
தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திடம் நிபந்தை விதிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
அத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வை முன்வைப்பதற்கு இலங்கையின் எந்தவொரு தலைவரும் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வரிகளை விதிப்பதனால் மாத்திரம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையாது என்றும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்