மணற்காடு புனித அந்தோனியார் ஆலய பங்கு மக்கள் பெருமையுடன் வழங்கும் கிறிஸ்துவின் பாடுகள் மரணம் உயிர்ப்பை சித்தரிக்கும் தவக்கால ஆற்றுகை
பலிக்களம் திருப்பாடுகளின் காட்சியானது எதிர்வரும் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் மணற்காடு புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.
இந்த திருப்பாடுகளின் காட்சி மணற்காடு மண்ணிலே முதல் முறையாக மேடை ஏறுகிறது.
பங்குத்தந்தை அருட்பணி யோன் குரூஸ் அடிகளாரின் வழிகாட்டலில், அருட்பணி மரிய சேவியர் அடிகளாரின் எழுத்துருவில் உருவான பலிக்களம் திருப்பாடுகளின் காட்சி அன்று யூலியஸ் அவர்களால் நெறியாள்கை செய்யப்படுகிறது.
130ற்கும் மேற்பட்ட கலைஞர்களை உள்ளடக்கி 100அடி அகன்ற மேடையில் பிரமாண்டமான தயாரிப்பாக உயிரோட்டமாக ஆற்றுகை செய்யப்படவுள்ளமை குறிப்பிட தக்கது.
எனவே அனைவரையும் ஆன்மீக ரீதியில் கலந்து கொள்ள பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்கள் அன்புடன் அழைத்து நிற்கின்றார்கள்.