அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிரான எதிர்கால தொழில் நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடலொன்று இன்று (24) பிற்பகல் தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியுடன் திட்டமிடப்பட்ட கலந்துரையாடல் தொடர்பில் இதுவரை சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 16ஆவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.