மின்கட்டணம் செலுத்தாமையால் இன்று (24) குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் குருநாகல் காரியாலயத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அந்த அலுவலகத்தில் சேவை பெற ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தபோது, மின்வாரிய குழுவினர் வந்து அந்த அலுவலகத்தில் மின் இணைப்பை துண்டித்தனர்.
இதனால் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.