கனடாவில் மதுப்பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மதுபான வகைகளுக்கான வரி பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாற்பது ஆண்டுகளில் பதிவான அதிகூடிய வரி அளவு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பொருளாதார பின்னணியில் இவ்வாறு மதுபான வகைகளுக்கான வரி அதிகரிப்பானது தங்களது தொழிற்துறைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என ரெஸ்டுரண்ட் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முடக்க நிலைகள், ஆளணி வளப்பற்றாக்குறை, விநியோகச் சங்கிலி பிரச்சினை, பொருட்களின் விலையேற்றம், பணவீக்கம் போன்ற காரணிகளினால் ரெஸ்டுரண்ட் தொழிற்துறை பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் அல்ஹகோல் வரி 6.3 வீதமாக உயர்த்தப்பட உள்ளது.
உற்பத்தியாளர்கள் மீதான வரி விதிப்பு இறுதியில் வாடிக்கையாளர்களின் கொள்வனவை மோசமாக பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
The post கனடாவில் மதுபான வகைகளுக்கான வரி அதிகரிப்பு! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.