வடக்கு மாகாண சபைக்கு சொந்தமான காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் புதிய பேருந்து நிலையமானது 2016 ஆம் ஆண்டு 94 மில்லியன் ரூபா செலவில் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்னும் முடியவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.
கிளிநொச்சி புதிய பேருந்து நிலையத்தை 2019ஆம் ஆண்டு வரை இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனம் இதன் ஒருபகுதியில் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு ஏனைய பணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபை 2020 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து முற்றிலும் முடிவடையாமல் இடையில் நின்றது.
பலவருடங்கள் ஆமை வேகத்தில் பணிகள் இடம்பெற்று முடிவடைந்த பின்னரும் மக்கள் பாவனைக்கு விடவில்லை என்று மக்கள் தெரிவித்தனர்.