தாயக விடுதலை போராட்டத்திற்கு தனது மூன்று பிள்ளைகளை வித்திட்ட தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக இன்று உயிரிழந்துவிட்டார்.
யாழ்ப்பாணம் வயாவிளானை பிறப்பிடமாகவும் ,அல்வாயில் வசித்தவரும், விசுவமடு 10ஆம் கட்டை விஸ்வமடுவை தற்போது வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் லட்சுமி 84 வயதில் இன்று (25) காலமானார்.
முதுமை மற்றும் நோய் காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியபோது உயிரிழந்துள்ளார்.
தாயக விடுதலைப் போராட்டத்தில் வீர காவியமான கப்டன் மாலிகா, வீரவேங்கை மாவரசி, வீரவேங்கை செங்கதிர் ஆகியோரின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் இறுதி சடங்கு அன்னாரின் விசுவமடு
சுண்டிக்குளம் இல்லத்தில் நாளை 26.03.2023 காலை 11.00 இற்கு நடைபெற்று பூதவுடல் விசுவமடு மயானத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளது.