பிரான்ஸின் Gagny (Seine-Saint-Denis) நகரில் உள்ள வீடொன்றில் 344 கிலோ கஞ்சா போதைப்பொருளினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுகிழமை பொலிஸார் சிலர் வீதிகண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது, சந்தேகத்துக்கு இடமான வாகனம் ஒன்று வீதியில் பயணிப்பதை அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். மகிழுந்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், மகிழுந்துக்குள் சிறிய அளவு போதைப்பொருள் எடுத்துச் செல்லப்பட்டுவதை கண்டுபிடித்தனர்.
பின்னர் குறித்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது வீடு சோதனையிடப்படதில், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 344 கிலோ கஞ்சா போதைப்பொருட்கள் கண்டறியப்ப்பட்டன.
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை 93 ஆம் மாவட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.