“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதால் பொருளாதாரப் பிரச்சினை தீருமா?” என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும், தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தினால் நிச்சயம் தேர்தலை எதிர்கொள்வோம் என்றும் ஊடகங்களிடம் அவர் குறிப்பிட்டார்.
நான் அடிப்படையில் சர்வதேச நாணயத்திடம் கடன் பெறுவது தொடர்பில் உடன்படாதவன். ஆனால், நாடு இப்போது வீழ்ந்திருக்கும் இடத்தில் இருந்து மீண்டெழ இந்த நிதியத்தைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் வரியை அதிகரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இது சுமக்க முடியாத அளவு அதிகமான அளவு. ஆனால், இதை எங்களால் நீக்க முடியாது. எதிர்காலக் கடன்களை அடைப்பதற்குப் போதுமான இலாபம் அரசுக்குக் கிடைக்காவிட்டால் கடன் கேட்டு எங்களால் சர்வதேசத்துக்குச் செல்ல முடியாது – என்றும் அமைச்சர் பந்துல மேலும் கூறினார்.