உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடும் தீர்மானத்திற்கும், எதிர்க்கட்சிகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
தேர்தலை விரைவாக நடத்துமாறு சகல எதிர்க்கட்சிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வலியுறுத்திய போது தேர்தலுக்கு முரணான கருத்துக்களை மாத்திரம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னணி முன்வைத்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சகல அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டப்பட்டது என ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விடுவிக்குமாறு உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவை மதிக்காமல் அரசாங்கம் குறிப்பாக நிதியமைச்சு செயற்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.