இனி பிணை இல்லை!! மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு கடும் சிக்கல் SamugamMedia

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக பொலிஸ் பிணையில்லா வழக்குகளை தாக்கல் செய்யுமாறு போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் தலைமையக கட்டளைத் தளபதிகள், நிலையத் தளபதிகள் மற்றும் போக்குவரத்து திணைக்கள கட்டளைத் தளபதிகளை அழைத்து வாய்மொழியாக அறிவுறுத்தல்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்த பிறகு, அவர்கள் இரண்டு முறைகளில் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். 

அதன் பின்னர் அந்த சாரதிகளை பொலிஸ் பிணையில் விடுவிக்க பொலிஸ் தலைமையகம் மற்றும் நிலையத் தளபதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், குறித்த வாகனத்தை வேறொரு நபருக்கு விடுவிப்பதற்கான திறன் பொலிஸாருக்கு இருந்தது. எவ்வாறாயினும், விபத்துக்களை குறைக்கும் வகையில், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை நிறுத்துமாறும், அவ்வாறு கைது செய்யப்படும் சாரதிகளை பொலிஸ் பிணை வழங்காமல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *