கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட கல்முனை, பந்தலடி பிரதேசத்தில் கடற்தொழிளாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதமாக நாரா நிறுவனம் சீன கடலட்டை பண்ணையை அமைக்கும் செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்தொழிளாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் முன்னாள் தலைவர் அ. அன்னராசா தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் யாழ்ப்பாணம் பாசையூர் கடற்தொழிழாளர்கள் பாரம்பரியமாக கடற்தொழில் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாரா நிறுவனம் குறித்த பகுதியில் அளவீடு செய்து வரும் நிலையில், பாசையூர் கடற்தொழிளாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஊடகவியளாளர்களுடன் இணைந்து இன்று கடல் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
சீன கடலட்டை பண்ணைக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் குறித்த பகுதி மீனவர்களுடன் கலந்துரையாடப்படவில்லை எனவும் சர்வாதிகார போக்கில் நாரா நிறுவனம் கடல் ஆய்வுகளை மேற்கொள்வதாக அ. அன்னராசா தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடலட்டை பண்ணை காரணமாக தமிழர் பகுதி கடல் வளங்கள் அழைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.