இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்ட போதிலும் உள்நாட்டு பால் மா விலையில் எவ்வித குறைப்பும் இல்லை என உள்ளூர் பால் மா உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படும் என இலங்கையின் பால் மா இறக்குமதியாளர்கள் கடந்த வாரம் அறிவித்திருந்தனர்.
இறக்குமதி செய்யப்பட்ட 1 கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய விலை 2900 ரூபாய் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் 80 ரூபாவால் குறைக்கப்பட்டு 1160 என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
எப்படியிருப்பினும் உள்ளூர் பால் மா Milco மற்றும் Pelwatte ஆகியவைகளின் விலைகளில் எவ்வித குறைப்பும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post பால்மா விலை குறித்து வெளியாகியுள்ள செய்தி! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.