கட்டுநாயக்கவில் இரு பங்களாதேஷ் பிரஜைகள் கைது: காரணம் வெளியானது! samugammedia

போலி விசாக்கள் மற்றும் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள்,  கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர்  50 வயதுடையவர் என்றும் மற்றொருவர் 24 வயது இளைஞர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இருவரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான யு.எல் -226 என்ற விமானத்தில் துபாயிலிருந்து  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பின்னர் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கான தமது ஆவணங்களை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள பீடத்தில் இவர்கள் வழங்கியுள்ளனர்.

இதன்போதே அவர்களது இரண்டு கடவுச்சீட்டுகளிலும் பயன்படுத்தப்பட்ட விசாக்கள் சட்டவிரோதமானவை என அங்கு பணியாற்றிய அதிகாரி அவதானித்துள்ளார். 

இதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும் நாடு கடத்த அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *