யாழில் போதைப்பொருள் வாங்கிய பிரபல பாடசாலை மாணவன் உட்பட 11 பேர் கைது! samugammedia

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட காலமாக குடு போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் நேற்றைய தினம் மாவட்ட குற்றச்சாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் வியாபாரியிடம் ஹெரோயின் வாங்கி பாவிக்கும் 10 வாடிக்கையாளர்களும்  நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்  எனவும்  கைது செய்யப்பட்டோர் 17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள்  என தெரிவிக்கப்படுகிறது.

போதைப் பொருள் வியாபாரி நீண்ட காலமாக  போதை பொருள்  விற்று வருகின்றமை தொடர்பில்   யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த இடம் சுற்றி வளைக்கப்பட்டு  போதை பொருள் வாங்கியோரும்கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply