நீதிமன்ற வளாகத்திலிருந்து முக்கிய வழக்குகளுடன் தொடர்புடைய கைதி தப்பியோட்டம்!samugammedia

நீதிமன்ற வளாகத்திலிருந்து சிறைச்சாலைக் கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

பத்தேகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமான போதே காலி சிறைச்சாலையின் கைதி தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த கைதி நீதிமன்ற அறையின் யன்னல் வழியாகத் தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

போதைப்பொருள் மற்றும் திருட்டுக் குற்றச்சாட்டில் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இவர் மீது போதைப்பொருள் தொடர்பான சுமார் 30 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய கைதியைக் கைதுசெய்ய 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply