இலங்கையில் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு! samugammedia

கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக 67,900 பேர் கைது செய்யப்பட்டதாகவும் இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரிக்கிறது என்றும் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை (NDDCB) தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் 52% பேர் ஹெராயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 37% பேர் கஞ்சா தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று NDDCB இன் இயக்குநர் ஜெனரல் பத்ராணி சேனாநாயக்க தெரிவித்தார்.

எட்டு மாத காலப்பகுதியில் மொத்தம் 6,728 நபர்கள் ‘ஐஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், நாட்டில் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ஆகியவற்றின் கணிசமான அளவு பயன்பாடு மற்றும் பரவல் காணப்படுகிறது . 

எனினும் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்க போதிய வசதிகள் இல்லாதது வருத்தத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் குறைந்தது 100,000 பெரும் கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் சுமார் 350,000 இருந்த போதிலும் அவர்களில் 4000 பேர் மட்டுமே சிகிச்சை மற்றும் புனர்வாழ்விற்காக வருகை தருவதாக அவர் மேலும் கூறினார்.

போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களை அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நடத்தினாலும், போதைக்கு அடிமையான பெண்களுக்கு இந்த நிறுவனங்களில் வசதிகள் போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *