வெள்ளவத்தை கடற்கரையில் பரபரப்பு – ஆணொருவரின் சடலம் மீட்பு samugammedia

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஹூது மாவத்தைக்கு முன்பாக உள்ள கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, அவர் 60 முதல் 70 வயதுக்கு இடைப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply