யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபகமாக உயிரிழந்த வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி! samugammedia

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ரிடிகல வனவிலங்கு காரியாலயத்தின் பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்துள்ளார்.

கலேன்பிந்துணு மகா வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குள் காட்டு யானைகள் உள் நுழைந்தததைத் தொடர்ந்து, அவற்றை விரட்டியடிப்பதற்கு முற்பட்ட வேளையிலேயே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

சம்பவத்தில் 48 வயதுடைய பீ.எம்.விஜேகோன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது சுமார் இருபது பேர் கொண்ட வனவிலங்கு உத்தியோகத்தர்கள் குழுவொன்று காட்டு யானைக் கூட்டத்தை விரட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யானைகளின் துப்பாக்கிச் சூட்டில் ஆத்திரமடைந்த யானையொன்று வனவிலங்கு அதிகாரிகளை துரத்திச் சென்று இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply