யாழில் – குற்றங்களை தடுக்கும் விசேட கூட்டத்தில் எடுக்கப்பட்டிருந்த சில தீர்மானங்கள்.! samugammedia

காரைநகர் பிரதேசத்தில் இடம்பெறுக்கின்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக பொலிசாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதும் சம்பவ இடத்திற்கு வருகை தருவதாகவும் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதில்லை என காரைநகர் பிரதேச செயலாளரினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த கடற்படையின் உதவயை நாடுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் போதை பொருள் பாவனையினை கட்டுப்படுத்தல் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று யாழ் மாவட்ட செயலககேட்போர் கூடத்தில் நடைபெற்று வரகின்றது.

இதேவேளை குருநகர் ரோனர் மீன்பிடி படகுமூலம் அனலைதீவு மீனவர்களின் வலைகள் சேதமாக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக கலந்துரையாடப்பட்ட போது குருநகர் மீன்பிடி சாசத்தின் தலைவரிடம் விளக்கம் கோரப்பட்ட போது அதற்கு நஸ்ட ஈடு வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.

எனினும் நஸ்டஈடுகள் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டிருந்தார்.

இதனை மீறி செய்ப்ட்டால் குருநகரில் இருந்து பயணிக்கின்ற இழுவைமடி படகுகள் கையகப்படுத்தப்படும் என்றும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் இதனை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதிகரித்து வருகின்ற வாள் வெட்டு கலாசாரத்தை நிறுத்துவதன் மூலம் மக்களின் அச்சநிலையை போக்க முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *