வடக்கு, கிழக்கில் பௌத்தத்தை பாதுகாக்க விசேட கூட்டம்! samugammedia

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில், கொழும்பில் இன்று விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது 

வட மாகாணத்தின் பிரதான பௌத்த தேரர், கல்கமுவே சந்தபோதி தேரர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய சிங்கள கூட்டமைப்பின் ஏற்பாட்டில், நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், வடக்கு, கிழக்கில், பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது 

இந்தக் கூட்டத்தில், வடக்கு, கிழக்கு பௌத்த அமைப்புகள், பௌத்த பிக்குகள், பௌத்த அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply