யாழில் ஐஸ் தொழிற்சாலைக்கு நீர் எடுப்பதற்கு மக்கள் எதிர்ப்பு samugammedia

தெல்லிப்பழை – பன்னாலை பிரதேசத்தில் இருந்து, ஐஸ் தொழிற்சாலைக்கு நீர் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு 7 மணியளவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நீர் எடுப்பதனால் எதிர்காலத்தில் கடல் நீர் விவசாயம் செய்யும் இடங்களுக்கும் வந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்ற காரணத்தினாலும், குடிப்பதற்கு நீர் தகுந்த நிலை அற்றுப்போகும் என்று கோட்பாட்டினாலும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பகுதியில் ஒன்று கூடிய மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டு போராடினர்.

Leave a Reply