நல்லூர் நாவலர் மண்டபம் பறிக்கப்படவில்லை, யாருடையதோ அவர்களிடம் சென்றுள்ளது! – ஆளுநர் விளக்கம் samugammedia

யாழ். நல்லூர் நாவலர் மண்டபத்தை பறிக்கவோ தாரைவார்க்கவோ இல்லை அது யாருடைய சொத்தோ அவர்களிடமே சென்றுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் அரசியல் கட்சி ஒன்றினால் ஏற்பாடு செய்த போராட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் அவரிடம் வினவியை போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

சிலர் நாவலர் மண்டபத்தை ஆளுநர் மத்திக்குத் தாரை வார்த்து விட்டார் மற்றும் மாநகர சபையிடமிருந்து பிடுங்கிக் கொடுத்துவிட்டார் என கோஷமிடுபவர்களுக்கு நாவலர் மண்டபம் இந்து கலாசாரத் திணைக்களத்துக்கு சொந்தமானது என நன்கு தெரியும்.

யாழ். உதவி அரச அதிபர் 6/1/23 இலக்க 2207.1981 ஆம் திகதிய கடிதம் – மேற்படி காணியை குறித்த அமைச்சு சார்பாக பணிப்பாளர், இந்து அலுவல்கள் தினைக்களம் அவர்கள் பொறுப்பேற்கவுள்ளார் எனத் தெரிவித்து அதற்கான வரைபடங்களும் காணிப் பத்திரங்களும் அனுப்பப்பட்டது.

அது மட்டுமல்லாது 22.11.2021 திகதி இடப்பட்டு யாழ். மாநகர சபைக்கு இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் திணைக்களத்திற்கு உரித்தான யாழ் நாவலர் கலாசார மண்டபத்தை மீளக் கையளித்தல் தொடர்பாக HA/06/NKM/01 இலக்கக் அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதம் யாழ் மாநகர சபைக்கும் அனுப்பப்பட்டது.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு உரித்தான யாழ். நாவலர் கலாசார மண்டபம் யாழ்ப்பாண மாநகர சபையின் பராமரிப்பு மற்றும் பாதுகபாப்பிற்காக வழங்கப்பட்டது.

மீளக் கோரப்படும் போது இரண்டு மாத தவணையில் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையில் மாநகர சபைக்கு பணிப்பாளர், இந்து விவகாரம் அவர்களது 6/1/23 (ii). இலக்க 1985.0606 ஆந் திகதிய கடிதத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது.

மேற்படி நாவலர் கலாசார மண்டபத்தினை மீள ஒப்படைக்குமாறு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரது HA/06/NKM/01 ஆம் இலக்க 2021.08.10 ஆந் திகதிய கடிதத்தின் பிரகாரம் அவர்களிடம் ஒப்படைக்ககப்படவில்லை.

குறித்த கட்டிடம் அமைந்துள்ள காணி இந்து விவகாரத்திற்கு பொறுப்பாகவிருந்த அப்போதைய பிரதேச அபிவிருத்தி அமைச்சினால் கையேற்கப்பட்டு அமைச்சின் நிதியில் கட்டப்பட்ட இம்மண்டபத்தின் உரிமை மற்றும் நிர்வகிக்கும் முழு அதிகாரம் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு உரித்தானது.

இன் நிலையில் ஆளுநர் நாவலர் மண்டபத்தை மத்திக்கு தாரைவர்க்கவோ அல்லது மாநகர சபையிடம் இருந்து பறித்துக் கொடுக்கவில்லை.

யாழ். நாவலர் மண்டபத்தில் இடம்பெற்ற திருப்தி அற்ற செயற்பாடுகள் காரணமாக மண்டபத்தை பாதுகாக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் என்னிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

இவ்வாறான நிலையில் நாவலர் மண்டபம் கட்டப்பட்ட நோக்கத்தினை சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கு தார்மீக உரிமை உடையவர்கள் அதனை பொறுப்பேற்றுள்ளார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply