இலங்கையின் இளம் தொழில்முனைவோரை வெளியுலகுக்குக் காட்டும் Ekva LLC start-up accelerator!

புத்தாக்கமிகு வியாபாரங்களைக் கட்டியெழுப்புவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் தொழில் முனைவோரைக் கண்டறியும் செயற்றிட்டத்தில் களமிறங்கியுள்ள வலுவான இலங்கைப் பின்னணியைக் கொண்ட அமெரிக்க நிறுவனமான Ekva LLC நிறுவனம் முதற்கட்ட நிதியிடற் திட்டத்தின் பொருட்டு 15 நிறுவனங்களைத் தெரிவுசெய்து மார்ச் 22ஆம் திகதி அதன் EKVA Accelerator திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

ஜித்மி நதுஷிகாவின் ‘துரியன் கிராமம்’ என்ற எண்ணக்கரு, தாரக்க அதிகாரியின் சிறிய அளவிலான பொருள் ஏற்றுமதி வணிகம் மற்றும் ஜெய்ரமணன் விஜயாலயனின் ‘ஸ்மைல் பிளஸ்’ ஆகியவை Ekva ek’celerator நிகழ்ச்சியில் அளிக்கை செய்யப்பட்ட சில
யோசனைகள் ஆகும்.

திறமையுள்ள தொழில் முனைவோருக்கு ஆதரவளித்து அவர்களை வலுவூட்டும் நோக்கில் 2022ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Ek'celerator என்று தனித்துவமாக அழைக்கப்படும் EKVA Accelerator, யோசனையை மட்டும் கொண்டுள்ள தொழில் முயற்சிகள், அந்த
யோசனையை வைத்துச் செய்யப்பட்ட மாதிரிக் கருத்திட்டத்தின் ஆதாரத்தை (PoC) கொண்டுள்ள தொழில் முயற்சிகள் அல்லது பருமட்டான முதற்கட்ட உற்பத்திகளை (MVP) கொண்டுள்ள தொழில் முயற்சிகள் தொடக்கம் வியாபாரத்தில் காலூன்றவும் ஆரம்ப வருமானத்திற்காகவும் போட்டியிடும் நிலை வரை வளர்ந்துள்ள தொழில் முயற்சிகள் வரை பலதொழில் முயற்சிகளைக் கைவசம் கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் பேசுகையில், இலங்கையைப் பற்றிப்
பேசும் போது, பொருளாதார நெருக்கடி ஒரு முக்கியமான பேசுபொருளாகவுள்ளது. ஆனால் இப்போது வாய்ப்புகள் பற்றி பேச
வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்களைப் போன்றவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பும்
கிடைக்கும் என்பதால் இது போன்ற நிகழ்வுகளை நான் விரும்புகிறேன்.

ஐக்கிய அமெரிக்கா புத்தாக்கத் துறையில் பெருமைமிக்க பாரம்பரியத்தை கொண்டுள்ளது. இலங்கையில் ஒரு வருடத்திற்கும்
மேலாக இருக்கும் எனக்கு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இங்கிருக்கும் புத்தாக்க முயற்சிகள் எனது சொந்த மாநிலமான கலிபோர்னியாவில் அல்லது ஐக்கிய அமெரிக்காவில் இருப்பதுபோல உயிர்ப்புடன் இருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

நாட்டில் தற்போது பல சவால்கள் இருக்கின்றபோதும் பலர் இலங்கையிலேயே இருந்து தங்கள் நாட்டை கட்டியெழுப்ப உதவுவதில் உறுதியாக இருக்கின்றனர். அவர்கள் தம் முயற்சியைக் கைவிடவில்லை. அவர்களின் கனவுகளை நனவாக்குவதற்கான மனவுறுதியையும் வாய்ப்புகளையும் வழங்கி அவர்களின் இந்த விடாமுயற்சிக்கும் நம்பிக்கைக்கும் காரணமாக இருக்கும் Ekva நிறுவனத்துக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அமித்துடன் பேசியபோதுதான் எனக்கும் அவருக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை அறிந்துகொண்டேன். நாங்கள்
இருவரும் சிறுவயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தோம். நாங்கள் இருவரும் கலிபோர்னியாவில் வளர்ந்தோம், நாங்கள் இருவரும் பெரிய
ஹிப்-ஹாப் ரசிகர்கள். அமித் உண்மையில் சந்தித்த ஹிப்-ஹாப் கலைஞர்களின் பாடல்களை நான் கேட்கிறேன். இவை யாவற்றுக்கும்
மேல் எங்களுக்கு புதுமைகள் மீது நாட்டம் இருக்கிறது. அவராலும் அவரது திறமையான குழுவினாலும் நடாத்தப்படும் இத் திட்டம்
தொழில்முயற்சி மற்றும் புதுமைகள் மீது நாம் கொண்டுள்ள மதிப்பு என்ற எமது இன்னொரு பொதுப்பண்பைக் காட்டுவதாக
அமைந்திருக்கிறது.

நுவரெலியாவைத் தளமாகக் கொண்ட குதிரைப் பயிற்சி மற்றும் மறுவாழ்வு வசதியை அமைக்கும் SAHAETA (South Asian High Altitude Equine
Training Academy), என்ற வணிக யோசனைக்குச் சொந்தக்காரரான ஒனேலி பலிப்பனே, தான் Accelerator திட்டத்தால் ஈர்க்கப்பட்டதாக கூறினார்.

துரியன் ஏற்றுமதிக்காக ஒரு முழு விநியோகச் சங்கிலியை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்த திருமதி ஜித்மி நதுஷிகா, தனது துரியன் கிராம எண்ணக்கருவை Accelerator குழுவின்முன் அறிமுக விழாவில் அளிக்கைசெய்ததோடு "Ekva ek'celerator திட்டத்தில் நடுவர் குழாம் தனக்கு ஆதரவளித்ததாகவும் ஒரு பெண் தொழில்முயற்சியாளரான தனக்கு இது மிகுந்த உத்வேகத்தை வழங்கியுள்ளதாகும்.

Codio என்ற இணையவழிக் கற்றல் தளம் என்ற எணக்கருவை முன்வைத்த பிரணவன் ஜெகதீஸ்வரன், Accelerator திட்டம் ஒத்த எண்ணம் கொண்ட தொழில்முனைவோரைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும் இந்த 4 மாத திட்டம் தங்களைப் போன்ற
தொழில்முனைவோருக்கு ஊக்கமளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

“புதிய தலைமுறைத் தொழில்முனைவோரைச் சந்தித்து அவர்களை ஊக்குவிப்பதற்காக மீண்டும் எமது இலங்கைத் தாய்நாட்டுக்கு வந்திருப்பதைவிட எமக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய விடயம் எதுவும் இருக்க முடியாது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் நாம் எல்லோரும் இணைந்து உலக அரங்கில் இலங்கைக்குக் கிடைக்கவேண்டிய மதிப்பையும் அங்கீகாரத்தையும் ஈட்டுவதற்குப் பாடுபடுவோம்.” எனவும் அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கை Unicorn Club இல் அதிலும் குறிப்பாக தமது நிறுவனங்களுடன் இணைவதே தமது நீண்ட கால நோக்கம் எனவும் Ekva நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அமித் பொடேஜு தெரிவித்தார்.

Ek’celerator,, அனைத்துத் தேர்ச்சிகளும் கைவரப்பெற்ற திறமைசாலிகளையும் வருங்கால இணைத் தாபகர்களையும் உருவாக்கும் வகையில் நிதி, முகாமைத்துவம், உறவுகளைக் கட்டியெழுப்புதல், மொழி, அளிக்கைசெய்யும் திறன், சந்தைப்படுத்தும் உத்திகள், நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் நிதி திரட்டுதல் முதலான துறைசார் திறன்களை மேம்படுத்துவதற்கான கற்கை நெறிகளை தொழில் முனைவோருக்கு வழங்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *