வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி! samugammedia

அம்பாந்தோட்டையில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

அம்பாந்தோட்டை – கொழும்பு பிரதான வீதியில் பயணித்த லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

மற்றைய நபர் படுகாயங்களுடன் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் கார் சாரதியான 55 வயதுடைய குடும்பஸ்தரும், காரின் முன் ஆசனத்தில் இருந்து பயணித்த அவரது 27 வயதுடைய மகனும் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே பலியாகினர்.

காரின் பின் ஆசனத்தில் இருந்து பயணித்த கார் சாரதியின் சகோதரரான 48 வயதுடைய குடும்பஸ்தர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

லொறியின் சாரதியான 29 வயதுடைய இளைஞரைக் கைது செய்த பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply