இலங்கையில் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பட்ட நிலை – பொதுமக்களிடம் உதவி கோரும் நிர்வாகம்! samugammedia

நாடு முழுவதும் இலவசமாக செயற்பட்டுவரும் சுவசரிய ஆம்புலன்ஸ் சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு பொதுமக்களிடம் உதவியை நிர்வாகம் நாடியுள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தமது சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு போதுமான நிதியை வழங்க முடியாத நிலைக்கு திறைசேரி தள்ளப்பட்டுள்ளதாக தேசிய பத்திரிகைகளில் விளம்பரமொன்றை வெளியிட்டு சுவசரிய அம்பியூலன்ஸ் நிர்வாகம் தெரிவிக்கின்றது.

இதனால், தமது சேவையை இந்த ஆண்டு தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வது சவாலாக காணப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை பாதுகாத்துக்கொள்வதற்காக தனியார் துறையினர் மற்றும் தனிநபர்கள் உதவியை முன்னெடுக்கும் வகையிலான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பியூலன்ஸ்களின் பராமரிப்பிற்காக ஆண்டொன்றிற்கு சுமார் 5 மில்லியன் ரூபா வரை செலவாகும் என விளம்பரத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply