ஒன்பதாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியை தாக்கிய ஆசிரியர்

பாடசாலையில் கல்வி கற்கும் ஒன்பது வயது சிறுமியை வகுப்பு ஆசிரியர் தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இவர் பனாகொட, மெத மண்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஆசிரியர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம பாடசாலையின் ஆசிரியராக கடமையாற்றும் இவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடுமையாக தாக்கிய ஆசிரியர்

இந்த ஆசிரியருக்கு ஒதுக்கப்பட்ட வகுப்பில் படிக்கும் 9 வயது சிறுமி கடந்த 23ம் திகதி ஆசிரியரால் தாக்கப்பட்டதுடன் சிறுமி வீட்டுக்கு வந்த பின்னர் தாயாருக்கு தகவல் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

தாய் ஹோமாகம தலைமையக காவல்துறைக்கு வந்து சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து தாக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி ஹோமாகம தலைமையக வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

சட்ட வைத்திய அதிகாரி வழங்கிய வைத்திய அறிக்கையின் பிரகாரம் சிறுமி தாக்கப்பட்டமை தெரியவந்துள்ளதுடன் அவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேகநபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

The post ஒன்பதாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியை தாக்கிய ஆசிரியர் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply