இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ்! samugammedia

தேர்தலை நடாத்துவது தேர்தல் ஆணைக்குழு. அரசாங்கம் அதற்கு முழு ஆதரவையும் கொடுக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய யாழ். பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் வகுப்பறை கட்டடத்தொகுதியைத் திறந்து வைத்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது இலங்கை எல்லைக்குள் அத்துமீறி உள்நுழையும் இந்திய இழுவைப் படகுகளது செயற்பாடு தொடர்பாகவும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், அது ஒரு அத்துமீறல். அத்துமீறி எமது நாட்டு எல்லைக்குள் வருகின்றார்கள். சமீபத்தில் எமது நாட்டு ஜனாதிபதி இந்தியா – புது டில்லிக்கு செல்லவுள்ளார். அந்த நேரத்தில் இந்த பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply