பௌத்த மயமாக்கலுக்கு எதிராக அரசியல் தலைமைகள் போதிய அக்கறை காட்டவில்லை – அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம்! samugammedia

வடக்கு கிழக்கில் சிங்கள பேரினவாதம் முன்னெடுக்கின்ற திட்டமிட்ட பௌத்த மயமாக்கலுக்கு எதிராக தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தொடர்ந்து போராடவேண்டும் என்றும் வெறுமனே ஒருநாளில் போரட்டங்களை நடத்துவதால் இதற்கான உடனடி தீர்வுகள் கிடைக்காது என அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று சமூகத்தில் செய்திப் பிரிவிற்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வவுனியாவில் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட பேரணியானது உரிய தீர்வு வழங்கப்படுமென வாக்குறுதி வழங்கியதையடுத்து நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா  வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விளைவிக்கப்பட்ட சேதம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி இன்று அறிவித்துள்ளார்.

குறிப்பாக நாவற்குழியில் அமைத்துள்ள பௌத்த விகாரையில் திறப்பு விழாவிற்கு தெற்கில் இருந்து வந்த சிங்கள மக்களை விடவும் இன்று வவுனியாவில் வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதி சிவலிங்கம் அழிப்பட்டதை கண்டித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இணைந்த மக்களின் எண்ணிக்கை குறைவாகவுள்ளதாக ஒரு கருத்து நிலவுவதாகவும் ஜோதிலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான விடயங்களில் தமிழ் அரசியில் தலைவர்கள் போதிய அக்கறை காட்டவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply