யாழில் முக்கிய பொருளுடன் 24 வயது இளைஞன் கைது!samugammedia

இன்றையதினம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் வீதியில் வைத்து 18 கிலோ கஞ்சாவுடன் 24 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் காரில் கஞ்சாவினை எடுத்துச் செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கஞ்சாவினை எடுத்துச் சென்ற காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply