எரிபொருள் விலைக் குறைப்பை அடுத்து, பொருட்களை இடமாற்றுகின்ற கொள்கலன்களின் கட்டணங்களை உடனடியாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி பொருட்களின் பரிமாற்றத்துக்கான கொள்கலன் கட்டணங்கள் 8 சதவீதத்தினால் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொருட்களின் இடமாற்ற செலவு குறையும் என்ற அடிப்படையில் பொருட்களின் விலைகளும் குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.