வடமாகாணகல்வி அமைச்சு, யாழ். இந்தியா உதவித்தூதரகம் ஆகியவற்றின் எற்பாட்டில், கல்விபொதுத்தராதர சாதாரணதரம், உயர்தரம் ஆகிய கல்வித்தரத்தில் இருந்து இடைவிலகிய வடமாகாண மாணவர்களின் தொழில்தகமைக்கான சான்றிதழ்களை பெறும்வகையில் சிறந்த உயர்கல்வி கற்கைநெறியினை கற்பதற்காக, இரண்டாவது தடவையாக எற்பாடு செய்யப்பட்ட யாழ். உயர்கல்விக் கண்காட்சி இன்று(01) யாழ். தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
இவ் யாழ். உயர்கல்விக் கண்காட்சியினை ஆரம்பித்துவைப்பதற்கு பிரதம அதிதியாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமாமகேஸ்வரன், கௌரவ விருந்தினராக யாழ் இந்திய உதவித்தூதரகத்தின் பதில் துணைத்தூதுவர் ராம் மஷேஸ் ஆகியோர்கள் கலந்துகொண்டு உரிய கண்காட்சி கூடாரங்களை திறந்து வைத்தனர்.
இதில் கல்வியினை இடைவிலகிய மாணவர்களும் மற்றும் கல்லூரியில் கல்விகற்றுவரும் மாணவர்களுமாக சும்மார் 80 மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு துறைசார்ந்த வழிகாட்டல் ஆலோசனைகளையும், பாடவிதான சார்ந்த கற்கைநெறி விளங்கங்களும் பற்றியும் இதன்போது கற்கைநெறிசார்ந்த துறைசார்ந்தவர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தனியார் கல்வி உட்பட்ட கற்கைநெறிகள் மூலமாக 46 கூடாரங்கள் அமைத்து தெளிவூட்டப்பட்டன.
வடமாகாண கல்விப்பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ், கல்விநிறுவன அதிகாரி, கற்கைநெறி ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இக்கண்காட்சி இன்று நடைபெற்றுவருவதுடன், நாளையும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.









