கச்சதீவை பௌத்த பூமியாக்கத் திட்டம்..! இந்தியாவும் ஏற்கிறதா? – சரவணபவன் கேள்வி..!samugammedia

பௌத்த மதத்துடன் தொடர்பு அல்லாத கச்சதீவை பௌத்த மாயமாக்களில் ஈடுபட்டு வர நிலையில் இந்தியா அதனை ஏற்கிறதா என்ற கேள்வி எழுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவன் கேள்வி எழுப்பினார்.

இன்றைய தினம்(01)  சங்கானை பேருந்து நிலையத்தில் வட்டுக்கோட்டை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற தமிழ் மக்கள் மீதுதான பல்வேறுபட்ட அடக்குமுறைகளை கண்டித்து இடம்பெற்ற  கவனயீர்ப்புப் போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கச்சதீவு தமிழ் மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பின் ஒரு அடையாளமாக விளங்குகிறது.
இவ்வாறான ஒரு நிலையில் கச்சதீவில் புத்தரை அமர வைத்துள்ள நிலையில் எமது வரலாறுகளை மாற்றி கச்சதீவை பௌத்தத்துடன் தொடர்பு பட்ட பூமியாக மாற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.
இவ்வாறான செயற்பாடுகளிடம் பெற்று வரும் நிலையில் இந்திய அரசானது இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்காமல் மௌனம் காப்பது கச்சதீவை பௌத்த பூமியாக ஏற்றுக் கொள்கிறதா? என்ற கேள்வி எமக்கு எழுகிறது.
தமிழ் மக்களின் நிலங்கள் தொல்லியல் என்ற போர்வையில் அவர்களின் வரலாற்று அடையாளங்களும் பூர்வீக நிலங்களும் அரசினால் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு அங்கமாக அண்மையில் வெடுக்கு நாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தை உடைத்து வீசினார்கள் 
இவ்வாறான ஒரு நிலையில் தமிழர் பகுதிகளில் தொடர்ச்சியான போராட்டங்கள் இடம்பெற வேட்டும் என்பதற்காக வட்டுக்கோட்டை தொகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளோம்.
தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராடுபவர்களாகவே காணப்படும் நிலையில் எமது தொப்புள் கொடி உறவான இந்தியா தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும்.
ஆகவே கச்சதீவையும் பௌத்தா பூமியாக மாற்றுவதற்கு முன்னர் பாரத பிரதமர் நரேந்திர மோடி குறித்த விடயத்தை தலையீடு செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply