திருகோணமலையில், நல்லிணக்க இப்தார் நிகழ்வு! samugammedia

திருகோணமலை மாவட்ட கங்கதலாவ ஐக்கிய ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்த நல்லிணக்க இப்தார்( நோன்பு திறக்கும் ) நிகழ்வு இன்று(02) கந்தளாய் ஆயிசா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச் .என்.ஜயவிக்ரம கலந்து கொண்டார்.

செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடல், தேவையுடையவர்களுக்கு உதவுதல் , பயபக்தியை தம்முள் ஏற்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்களை கொண்டமைந்ததாக நோன்பு காணப்படுகின்றது. இப்பண்புகள் இஸ்லாம் சமயத்தை போன்று ஏனைய சமயங்களிலும் காணப்படுவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மெளலவிமார்கள், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், ஊர் ஜமாஅத்தினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *