பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை, எதிர்க்கட்சி தலைவராக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துடன் இணையும் பட்சத்தில், நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவொன்று எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக அறிய முடிகின்றது.
அதன்பின், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிப்படுத்தி, நாமல் ராஜபக்ஸவை எதிர்க்கட்சித் தலைவராக்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தமக்கு அமைச்சு பதவியின்றி தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது பயனற்றது என அமைச்சு பதவிகளை எதிர்பார்த்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.
அதனால், வெகுவிரைவில் இது குறித்து தீர்மானமொன்றை எடுக்க தாம் தயாராகிவருவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.