சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு ஏற்பட்ட சிக்கல்- வெளியான விசேட அறிவிப்பு!samugammedia

டீசல் விலை குறைவினால் திருத்தப்பட்ட பேருந்து கட்டண பட்டியலை காட்சிப்படுத்தாமல் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் இன்று (03) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ தெரிவித்தார்.

அதன்படி, திருத்தப்பட்ட பேருந்து கட்டண பட்டியலை அனைத்து பயணிகளும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்துவது கட்டாயம் எனவும், அங்கீகரிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் பேருந்துகளை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 29ம் திகதி டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில், கடந்த 31ம் திகதி முதல் பேருந்து கட்டண திருத்தம் அமுலுக்கு வந்த நிலையில், ஏழு வட்டார அலுவலகங்கள் மூலம் பேருந்து உரிமையாளர்களுக்கு திருத்தப்பட்ட பேருந்து கட்டண பட்டியல் வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது வரை சில பேருந்துகள் பயணிகளுக்கு தெளிவாக தெரியும் வகையில் ஆவணத்தை காட்டாமல் அதிக கட்டணம் வசூலிக்க ஆசைப்படுவதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து முறைப்பாடுகள் வந்ததாக கூறப்படுகிறது.

எனவே எதிர்வரும் 03ஆம் திகதி முதல் மேல்மாகாண டெர்மினல்களில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அனைத்து பேருந்துகளும் பயணத்தை ஆரம்பிக்கும் முன்னர் திருத்தப்பட்ட கட்டண பட்டியலை கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செல்லாத பேருந்துகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் 011 2 860 860 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தலைவர் பிரசன்ன சஞ்சீவ கேட்டுக்கொண்டார்.

Leave a Reply