12.5 கிலோகிராம் எடையுள்ள லாப் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள லாப் சமையல் எரிவாயுவின் விலை 1,290 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை ரூ.3,990 ஆகும என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,596 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பை இன்று (04.04.2023) நள்ளிரவு முதல் மேற்கொள்ள லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 3738 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு 402 ரூபாவால் குறைக்கப்படுகிறது. எனவே அதன் புதிய விலை 1,502 ரூபா ஆகும்.
2.3 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு 183 ரூபாவால் குறைக்கப்படுவதால் அதன்ப புதிய விலை 700 ரூபா ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் உள்நாட்டு எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.