நாட்டிற்கு சிவ தோஷம்: குல நாசம் ஏற்படும் என்கிறார் சிறீதரன் எம்.பி!samugammedia

‘சிவ தோஷம் என்பது குல நாசம்’ என்ற பழமொழிக்கு அமைய இந்த நாடு அழிவை நோக்கி செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய சிறீதரன், சிவன் மீது கைவைக்கப்பட்டுள்ளமை பேராபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

சைவ தமிழர்கள் சிவன் வணக்கத்தை மிகவும் கண்டிப்பாகவும், கரிசனையோடும் மேற்கொண்டு வருவதாகவும் சிறீதரன் சுட்டிக்காட்டினார்.

ஏற்கனவே நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றிருந்ததுடன், அரசாங்கத்தின் மனங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்பொழுது சர்வதேச நாடுகள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு இனத்தின் அடிப்படை வணக்க முறைகளை சிதைத்தெறியும் செயற்பாடு இடம்பெற்றுள்ளதாகவும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்

Leave a Reply