உலகில் ஆறில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை- உல­க சுகா­தார நிறு­வ­னம் பகீர்!samugammedia

உல­கில் வாழும் மக்களில்  ஆறில் ஒரு­வர் தங்­க­ளின் வாழ்­நா­ளில் ஒரு­மு­றை­யா­வது மலட்­டுத்­ தன்­மை­யால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பர் என்று உல­க சுகா­தார நிறு­வ­னம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்­தி­னம் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யிலே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மலட்­டுத்­ தன்மை தொடர்­பாக மேலும் ஆக்­க­ பூர்­வ­மான தக­வல்­க­ளைத் தொடர்ந்தும் திரட்டுமாறும்  உலக நாடு­க­ளைக் கேட்­டுக் ­கொண்­டுள்ளது.

1990 லிருந்து 2021ஆம் ஆண்டிற்கு இடையே வெளி­யான புள்ளி விவ­ரங்­கள் ஆரா­யப்­பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உல­கில் 17.5 விழுக்­காட்­டுப் பெரி­ய­வர்­க­ளால் குழந்தை பெற்­றுக்­ கொள்ள முடி­யா­து என்பதையும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடுத்­தர, குறைந்த வரு­மான நாடு­க­ளை­ விட அதிக வரு­மா­னம் வழங்­கப்­படும் நாடு­களில் அதிக பாதிப்பு இருப்­ப­தும் அறிக்­கை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

கருத்­தடை முறை­கள் ஏது­மின்றி குறைந்­தது 12 மாதங்­க­ளுக்கு பாலி­யல் உற­வில் ஈடு­பட்ட பிற­கும் கரு உரு­வா­கா­விட்­டால் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் மலட்­டுத் ­தன்­மைக்கு ஆளா­ன­வர்­கள் என்று உல­கச் சுகா­தார நிறு­வ­னம் வகைப்­ப­டுத்­தி­யுள்­ளதுடன் ஆண், பெண் இருபாலாருக்கும் அது பொருந்­தும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply