லக்ஷ்மன் கிரியெல்ல இராஜினாமா செய்ய தயாரா?- கேள்வியெழுப்பிய மஹிந்த! samugammedia

சஜித் பிரேமதாச மற்றும் இருவர் மாத்திரமே எதிர்க்கட்சியின் முன் ஆசனங்களில் எஞ்சியுள்ளதாகவும், ஏனைய அனைவரும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராவது அரசாங்கத்திற்கு வந்தால், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தயாரா என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம கேள்வி எழுப்பியுள்ளார்.

முடிந்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அறிவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம சவால் விடுத்துள்ளார்.

Leave a Reply