
உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் தொகையினை அரைவாசியாகக் குறைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை தயார் நிலையில் உள்ளது. இவ்வறிக்கை விரைவில் பிரதமரும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.