தேர்தலின் பின்னர் திருமலை மாநகர சபைக்கான தீர்மானம் நிறைவேற்றப்படும்!samugammedia

திருகோணமலை நகரசபை, மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டபோதும் உத்தியோக பூர்வமாக மாநகர சபையாக செயற்படத் தொடங்கவில்லை அவ்வாறு செயற்படுவதற்குரிய விதி முறைகள்  நிறைவேற்றப்பட்ட பின்பே மாநகர சபையாக இயங்க முடியும் என திருகோணமலை நகர சபையின் செயலாளர் வெள்ளையன் ராஜசேகர் தெரிவித்தார்.

உள்ளுராட்சி அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் கடந்த 20. 3. 2023 திகதி முதல் திருகோணமலை நகரசபை தர முயர்த்தப்பட்டபோதும் அந்த நடை முறைகள் இன்னும் பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
திருகோணமலை மாநகர சபையின் செயற்பாடுகள் குறித்து கேட்டபோதே அவர் இவ்விடத்தை குறிப்பிட்டார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
  9.9.2022 திகதியிடப்பட்ட 2296 37 இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் திருகோணமலை நகர சபை கடந்த 20.3.2023 திகதி முதல் உள்ளுராட்சி அமைச்சினால் மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்டபோதும் உத்தியோக பூர்வமாக அது இன்னும் நடை முறைக்கு கொண்டுவரப்படவில்லை. 
மாநகர சபை கட்டளை சட்டத்தின் பிரகாரம் சபை கூடி அச் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்பே தரமுயர்த்தல் உத்தியோக பூர்வமானதாக ஏற்றுக் கொள்ளப்படும் அதன்பின்பே மாநகர சபை அந்தஸ்து உறுதிப்படுத்தப்படுவதுடன் அதன் விதிகள் சட்டங்கள் நடை முறைகள் அமுல்படுத்தப்படும். உள்ளுராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதன் காரணமாக மாநகர சபை தர முயர்வு அமுல்படுத்தப்படவில்லை . திருகோணமலை மாநகர சபைக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்ட  கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 
தேர்தல் முடிந்து ஆட்சி அமைப்பு தீர்மானிக்கப்பட்டு முதலாவது அமர்வின்போது மாநகர சபைக்கான தீர்மானம் நிறைவேற்றப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply