யாழில் விபத்தின் போது மாற்றுத்திறனாளியான குடும்பத் தலைவரைக் கொண்ட குடும்பத்திற்கு இராணுவத்தின் ஊடாக வீடு கையளிப்பு..!samugammedia

யாழில் மாற்றுத் திறனாளி குடும்பத்திற்கு இராணுவத்தின் ஊடாக புதிய வீடு  ஒன்று இன்று(06)  கையளிக்கப்பட்டுள்ளது.

துன்னாலை தெற்கு J/370 கிராம சேவகர் பரிவில் விபத்துக்குள்ளாகி மாற்றுத் திறனாளியான. ஐந்து பேர் கொண்ட திரு திருமதி  சதீஸ்வரன் ராஜேஸ்வரி குடும்பத்தினருக்கு கனடாவை சேர்ந்த தம்பிக்த சின்னையா மற்றும் வன்னி எயிட்ஸ் நிதி அனுசரணை குறித்த வீடு நான்காவது சிங்க றெஜிமென்ற் படைப்பிரிவின் ஆளணி மற்றும் கட்டுமான உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டு குறித்த பயனாளியிடம் கையளிக்கப்பட்து
4வது சிங்க றெஜிமென்ற தளபதி லெப்டினன்ட் கேணல் தவுலுகல  தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்,  பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சர்ண போதொட கலந்து கொண்டு வீட்டினை பயனாளியிடம் கையளித்தார்.
இதில் 551 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர்  யூட் காரிய கரவண மற்றும் இராணுவ தளபதிகள், கரவெட்டி பிரதேச செயலக உதவி பிரதேச செயலர், மத தலைவர்கள், அதிகாரிகள், மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply