
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திலேயே காணி தொடர்பிலான அதிகமான சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பாக முப்படையினரின் அத்து மீறல்கள், தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டு வரும் அடாவடிகள், இனவாத நிகழ்ச்சி நிரலுக்கு அமைய முன்னெடுக்கப்படும் திட்டமிடப்பட்ட செயற்பாடுகள், அரச நிர்வாகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் மக்கள் காணிகள் தொடர்ந்தும் அபகரிக்கப்படுகிறது.