கொரளவெல்ல, இங்கிரிய, கிரியெல்ல, எம்புல்தெனிய, ஹல்துமுல்ல, ரத்மல்வெஹர மற்றும் வரதெனிய ஆகிய பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று மதியம் 12.13 மணிக்கு இந்த பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் வேளையில் வெயிலில் நடமாடுவதனை குறைக்குமாறும் அதற்கு பொருத்தமான ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் பல மாகாணங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
காற்று மற்றும் மின்னல்களினால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது