விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லாஸ்லியா. இவர் பிக்பாஸில் போட்டியாளராக இணைந்து கொள்வதற்கு முன் இலங்கையில் உள்ள ஒரு சேனலில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி இருக்கின்றார்.
இதன் மூலமாகவே இவருக்கு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிகழ்ச்சியில் 3 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டதோடு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டு இருக்கின்றார்.
இந் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நடிகை லாஸ்லியா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் விதம்விதமாக போட்டோசூட்களை நடத்தி அதனை பகிர்ந்து வருகின்றார்.
இதையடுத்து இன்று உயிர்த்த ஞாயிறு தினம் உலக வாழ் கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் நிலையில் அதற்கு வாழ்த்து தெரிவித்து சில புகைப்படங்கள் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
அது தற்போது வைரலாகி வருகின்றது.