யாழ். வடமராட்சியில், மணல் அகழ்விடங்களை பார்வையிட்ட சுமந்திரன் எம் பி! samugammedia

யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் மணல் அகழ்ந்த இடங்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று காலை நேரடியாக சென்று பார்வையிட்டார்.

அதன் பின் ஊடகங்களுக்க கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பல்வேறு முறையற்ற மணல் அகழ்வு தொடர்பாக கருத்து வெளியிட்டார்.

யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் மகேஸ்வரி நிதியத்தால்  2010ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டுவரை சுமார் பத்து இலட்சம் கியூப் மணல் மண்ணிற்கு அதிகமான மணல் மண் முறையற்ற விதத்தில் அகழப்பட்டு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது.

கனிய வளங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மணல் அகழ்வானது நில மட்டத்திற்க்கு மேலாக மூன்று அடிக்கு மேல் அகழப்பட வேண்டும் ஆனால் மகேஸ்வரி நிதியம் கடல் மட்டத்திலிருந்து சுமார் மூன்று அடிக்கு கீழ்  சுமார ்இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில்  அகழப்பட்டுள்ளது.

இதனால் கொட்டோடை கிராமம் கணிசமான பகுதி நாசமாக்கப்பட்டுள்ள நிலையில் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கதவதாலும் கடந்த இரண்டு வருடமாக கனிய வளங்கள் சட்டத்திற்க்கு முரணாண மணல் விநியோகம் இடம் பெற்றுவருகிறது.

இதேவேளை மணல் அகழ்வு நோக்கத்திற்க்காக. அம்பன் கிழக்கு மற்றும் அம்பன் மேற்க்கு கிராம அபிவிருத்தி சங்கங்களின் எல்லைகள் பிரிப்பு நடவடிக்கைகள் இடம் பெறுவதாகவும் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதே வேளை மணல் அகழ்வு மற்றும் சமகால அரசிலயல் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

Leave a Reply