இலங்கையில் சீன ராடர் அமைக்கப்பட்டால் இந்தியாவுக்கு பேராபத்து: சபா குகதாஸ் எச்சரிக்கை! samugammedia

இலங்கையின் தெய்வேந்திர முனையில் சீனா அரசாங்கத்தால் ராடர் அமைக்கப்பட்டால் அது இந்தியாவுக்கு பாரிய பாதிப்பாக  அமையும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையில் சீன ராடர் அமைக்கப்பட்டால், இந்தியாவின் பல்வேறு விதமான இரகசிய நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என சபா குகதாஸ் தெரிவித்தார்.

குறிப்பாக இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஏவுகணை தளங்கள், விண்வெளி ஆராச்சி நிலையங்கள் மற்றும் இந்தியாவின் மேற்கு பகுதியிலுள்ள கடற்படை தளங்கள் போன்றவை சீனாவால் கண்காணிக்கப்படலாமென அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்தியாவின் தென் எல்லையில் காணப்படும் மிகவும் முக்கியமான தொழிற்சாலைகள் மற்றும் இராணுவ தளங்கள் போன்றவை சிக்கலுக்கு உள்ளாகும் ஓர் அபாயகரமான நிலைமை காணப்படுவதாகவும்  சபா குகதாஸ் தெரிவித்தார்.

Leave a Reply