போதைப்பொருளுடன் கைதான 17 யாழ். பல்கலை மாணவர்கள் பீடாதிபதியின் கருணையால் விடுவிப்பு! samugammedia

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தில் கல்வி பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 17 பேர் உயிர்கொல்லி போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகத்தில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – மணத்தறை வீதியிலுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்து பல்கலைக்கழக மாணவர்கள் கற்று வருகின்றனர்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட உயிர்கொல்லி போதைப்பொருளை விற்பனை செய்யும் ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக நேற்று மாலை மாணவர்கள் தங்கியிருந்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டது.

அங்கிருந்த 17 மாணவர்களின் (15 சிங்கள மாணவர்கள், இரண்டு தமிழ் மாணவர்கள்) உடமையில் உயிர்கொல்லி போதைப்பொருள் மற்றும் போதைமாத்திரைகள் என்பன காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அவற்றை மீட்ட பொலிஸார் மாணவர்களைச் சந்தேகத்தில் கைது செய்தனர்.

இது தொடர்பில் விஞ்ஞானபீட பீடாதிபதிக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

கைதான மாணவர்களுக்கு பரீட்சை நடைபெற்று வருவதாக பீடாதிபதி தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

பல்கலைக்கழக ரீதியான நடவடிக்கையை எடுப்பதுடன் மாணவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவது தொடர்பில் ஆராயுமாறும் தெரிவித்து பொலிஸார் அவர்களை விடுவித்துள்ளனர்.

Leave a Reply